10 வருடம் ஆண்ட மோடியே ஓட்டுப்பிச்சை கேட்கிறார், நானெல்லாம் எம்மாத்திரம்?: மன்சூர் அலிகான் கலகல!

நடிகர் மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான்

இந்தியாவை 10 ஆண்டுகள் ஆண்ட பிரதமர் மோடியே, மக்களிடம் குனிந்து குனிந்து ஓட்டு பிச்சை கேட்கும்போது, நானெல்லாம் எம்மாத்திரம் என்று நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்தார் மன்சூர்அலிகான்
வேட்புமனு தாக்கல் செய்தார் மன்சூர்அலிகான்

2024-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. ஜூன்.4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளது. வேலூர் தொகுதியில் போட்டியிட தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்தார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளேன். இன்னும் அதற்கான ஒப்புதல் அளிக்கப்படவில்லை. அதற்கு 2 அல்லது 3 மாதங்கள் வரை ஆகலாம். அதனால், இந்த தேர்தலில் சுயேட்சையாகத்தான் நிற்கிறேன். எனக்கு பலாப்பழம், கிரிக்கெட் பேட், லாரி சின்னங்களை கேட்டு இருக்கிறேன். லாரிக்கு தமிழில் சரக்கு உந்து என்று பெயர். சரக்கு என்றால் உடனே அந்த சரக்கு என்று நினைக்க வேண்டாம்.

வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான்
வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான் HR Ferncrystal

எனக்கு மிகவும் பிடித்த தொகுதி என்பதால் வேலூரில் போட்டியிடுகிறேன். இங்கு சுற்றி மலைகள் இருக்கின்றன. அதனை பச்சை பசுமையாக மாற்றப் போகிறேன். எனக்கு சின்னம் கிடைத்த பிறகு, அதைக் கொண்டு மக்களிடம் ஓட்டுக்காக போராட வேண்டும்.

பலாப்பழம் சின்னம் கிடைத்தால், தலையில் பலாப்பழத்தை வைத்துக் கொண்டு மக்களிடம் அம்மா ஓட்டுப் போடுங்க.. அம்மா ஓட்டுப் போடுங்க என்று பிச்சை கேட்பேன். எல்லோரும் மக்களிடம் ஓட்டுப் பிச்சை கேட்டுத்தான் முதல்வராகவும், பிரதமராகவும் ஆகியிருக்கிறார்கள். இந்த நாட்டை 10 ஆண்டுகள் ஆண்ட பிரதமரே மக்களிடம் குனிந்து குனிந்து ஓட்டு பிச்சை கேட்கிறார். நானெல்லாம் எம்மாத்திரம் அய்யா.." என்று கலகலப்பாக பேசினார்.

இதையும் வாசிக்கலாமே...

அமெரிக்காவை அதிரவைக்கும் செக்ஸ் ஸ்டிரைக்... மனைவிகள் போராட்டத்தால் கதறும் கணவர்கள்

மகனுக்கு சீட் இல்லை... திமுக தலைமை மீது பொன்முடி அதிருப்தி!

சுயேச்சைகள் ஆட்டம் ஆரம்பம்... சவப்பெட்டியுடன் வேட்புமனு தாக்கலுக்கு வந்த வேட்பாளர்!

எலெக்‌ஷன் நேரத்துல மூச்சு விடக்கூட பயமா இருக்கு... நடிகர் ரஜினிகாந்த் மிரட்சி!

களமிறங்கும் விஜயகாந்த் குடும்பம்... விருதுநகரில் விஜய பிரபாகரன்; கள்ளக்குறிச்சியில் சுதீஷ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in