திகார் சிறையில் அடைக்கப்படுகிறார் மணீஷ் சிசோடியா: பகவத் கீதை எடுத்துச் செல்ல அனுமதி!

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியாதிகார் சிறையில் அடைக்கப்படுகிறார் மணீஷ் சிசோடியா: பகவத் கீதை எடுத்துச் செல்ல அனுமதி!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவை மார்ச் 20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் திகார் சிறைக்கு மாற்றப்படவுள்ளார்.

மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் முடிவடைந்ததை அடுத்து இன்று பிற்பகல் அவர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், சிபிஐ மேலும் காவலில் வைக்கக் கோரவில்லை என்று குறிப்பிட்டு அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

மருத்துவ பரிசோதனையின் போது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்து செல்ல மணீஷ் சிசோடியாவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஒரு ஜோடி கண்ணாடி, ஒரு டைரி, பேனா மற்றும் பகவத் கீதை புத்தகம் ஆகியவற்றை எடுத்துச் செல்லவும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிசோடியாவின் வழக்கறிஞர் கோரியபடி, அவரை தியான அறையில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமீனுக்கு விண்ணப்பித்துள்ள மணீஷ் சிசோடியாவின் கோரிக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். பிப்ரவரி 26ம் தேதி கைது செய்யப்பட்ட அவர், 5 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்றம் அவரின் சிபிஐ காவலை இரண்டு நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டது. 51 வயதான சிசோடியா, தனது ஜாமீன் மனுவில், சிபிஐ அதிகாரிகள் தன்னிடம் ஒரே மாதிரியான கேள்விகளைக் கேட்பதாகவும், அது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார். ஆனால், விசாரணையின் போது சிசோடியா ஒத்துழைக்காமல் தப்பித்துக்கொண்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in