மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன்... ஓராண்டு சிறைவாசத்துக்குப் பின் வெளியில் வருகிறார்!

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா

டெல்லி புதிய மதுபானக் கொள்கை வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி புதிய மதுபானக் கொள்கை வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி 26ல் கைது செய்யப்பட்ட மணிஷ் சிசோடியா கடந்த ஒரு வருடமாக சிறையில் இருக்கிறார். இவரின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில், மணீஷ் சிசோடியா தனது உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்திருந்தார்.

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா

சிசோடியாவின் உறவினருக்கு பிப்ரவரி 14ம் தேதி லக்னோவில் திருமணம் நடைபெற உள்ளது. இதில் கலந்துக்கொள்ள மணிஷ் சிசோடியா வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் கோரி இருந்தார். ஆனால் மூன்று நாட்களுக்கு மட்டுமே ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அமலாக்க இயக்குனரகம் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த விவகாரத்தில் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது டெல்லி சிறப்பு நீதிமன்றம்.

டெல்லி சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, சிசோடியா பிப்ரவரி 13ம் தேதி மாலை 5 மணி முதல் பிப்ரவரி 15ம் தேதி மாலை 5 மணி வரை வெளியில் இருப்பார் என சொல்லப்படுகிறது. அவரது ஜாமீன் மனுக்கள் கீழ் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை பலமுறை நிராகரிக்கப்பட்டு உள்ளன. தனது நோய்வாய்ப்பட்ட மனைவியை வாரம் ஒருமுறை சந்திக்க சமீபத்தில் நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா

மணிஷ் சிசோடியாவின் ஜாமீனுக்கு சிபிஐ தரப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சிபிஐ சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், மணீஷ் சிசோடியா செல்வாக்கு மிக்கவர். எனவே ஆதாரங்களை சிதைக்க முடியும். திருமணத்தில் கலந்து கொள்ள ஒரு நாள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என வாதிட்டனர். ஆனாலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் ஆம் ஆத்மி கட்சியினர் நிம்மதியடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியன் ரயில்வேயில் 9,000 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

அதிர்ச்சி... ஒரே விடுதியில் அடுத்தடுத்து மாணவர், மாணவி தூக்கிட்டு தற்கொலை!

நடுரோட்டில் கட்சி மாறிய அதிமுக நிர்வாகி... வேட்டியை அவிழ்த்து சாலையில் வீசியதால் பரபரப்பு!

‘ஐயா மன்னிச்சுடுங்க...’ இயக்குநர் வீட்டு கதவில் தேசிய விருதுகளை தொங்க விட்ட திருடர்கள்!

கல்வி மட்டுமல்ல... 200 மாணவிகளுக்கு வீடும் கட்டித் தந்த ஆசிரியை; குவியும் பாராட்டுகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in