டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ நடவடிக்கை

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியாடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ நடவடிக்கை

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ இன்று கைது செய்துள்ளது. நாளை காலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று காலை முதல் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐயால் விசாரிக்கப்பட்டு, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மணீஷ் சிசோடியாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்காக மத்திய புலனாய்வுப் பிரிவின் முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் அவர் டெல்லி பட்ஜெட்டை மேற்கோள் காட்டி ஒரு வாரம் அவகாசம் கோரினார். மணீஷ் சிசோடியா கேஜ்ரிவால் அரசாங்கத்தில் நிதி இலாகாவை கையாளுகிறார்.

ஏழு முதல் எட்டு மாதங்கள் சிறையில் இருக்கத் தயார் என்று சிசோடியா ஏற்கனவே கூறியிருந்தார். அவர், "சில மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்றால் எனக்கு கவலையில்லை. நாட்டுக்காக தூக்கிலிடப்பட்ட பகத்சிங்கின் சீடர் நான்" என்று ட்வீட் செய்திருந்தார்.

எனவே மணீஷ் சிசோடியாவின் வீடு மற்றும் சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே பாதுகாப்பை பலப்படுத்தி, அவர் கைது செய்யப்பட்டால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க டெல்லி காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. காலையில், ஆம் ஆத்மி கட்சியின் போராட்டமும் கலைக்கப்பட்டதுடன், பல ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக இன்று காலையில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், "நாட்டிற்காகவும், சமுதாயத்திற்காகவும் நீங்கள் சிறைக்குச் செல்லும்போது, அது சாபமல்ல, பெருமையாகும். நீங்கள் விரைவில் சிறையிலிருந்து திரும்பி வர இறைவனை வேண்டுகிறேன். குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் டெல்லியில் உள்ள அனைவரும் உங்களுக்காகக் காத்திருப்போம்" என்று அவர் ட்வீட் செய்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in