நீங்கள் துரோகி... இந்தியாவை கொன்று விட்டீர்கள்! மக்களவையில் தெறிக்க விட்ட ராகுல் காந்தி!

நீங்கள் துரோகி... இந்தியாவை கொன்று விட்டீர்கள்! மக்களவையில் தெறிக்க விட்ட ராகுல் காந்தி!

"மணிப்பூரில் இந்தியாவை கொன்று விட்டீர்கள். நீங்கள் ஒரு துரோகி, நீங்கள் தேசபக்தர் அல்ல'' என்று மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசத்துடன் பேசினார்.

"முதலில், என்னை மக்களவை உறுப்பினராக மீண்டும் இணைத்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசத் தொடங்கினார்.

"கடந்த முறை நான் பேசிய போது, அதானியின் மீது கவனம் செலுத்தியதால் உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கலாம். உங்கள் மூத்த தலைவர் வேதனைப்பட்டார். அந்த வலி உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் நான் உண்மையைச் சொன்னேன். இன்று அதானி குறித்து என் பேச்சு இல்லை என்பதால் பாஜக நண்பர்கள் பயப்படத் தேவையில்லை.

சில நாட்களுக்கு முன்பு நான் மணிப்பூர் சென்றேன். நமது பிரதமர் இன்று வரை செல்லவில்லை. ஏனென்றால் அவருக்கு மணிப்பூர் இந்தியா அல்ல. நான் மணிப்பூர் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். ஆனால் உண்மை அது தான். மணிப்பூர் இனி நிலைக்காது. மணிப்பூரை இரண்டாகப் பிரித்து விட்டீர்கள். மணிப்பூரைப் பிரித்து உடைத்தீர்கள் என்று ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த போது, ராஜஸ்தானுக்கு எப்போது செல்வீர்கள் என்று ஆளும் எம்.பி.க்கள் ராகுல் காந்தியிடம் கேட்ட போது, "நான் இன்று செல்கிறேன்" என்கிறார்.

மேலும் தொடர்ந்த ராகுல், "ஆரம்பத்தில், நான் யாத்திரை தொடங்கும் போது, தினமும் 10 கிமீ ஓடினால், 25 கிமீ நடப்பது பெரிய விஷயமில்லை என்று என் மனதில் இருந்தது. இன்று அதைப் பார்க்கும் போது அது திமிர். அப்போது என் உள்ளத்தில் கர்வம் இருந்தது.

மணிப்பூரில் இந்தியாவை கொன்றனர். மணிப்பூரில் மட்டும் அல்ல இந்தியாவை கொன்று விட்டீர்கள். அவர்களின் அரசியல் மணிப்பூரை கொல்லவில்லை. மணிப்பூரில் இந்தியாவை கொன்று விட்டார்கள். நீங்கள் ஒரு துரோகி, நீங்கள் தேசபக்தர் அல்ல என்றார் ஆவேசத்துடன். அப்போது ராகுல் பொய் சொல்வதாக பாஜக எம்பிக்கள் குரல் எழுப்பியதற்கு, பொய் சொல்வது உங்கள் வேலை என்று ராகுல் பதில் அளித்தார். மணிப்பூரில் நான் சந்தித்த பெண்கள், குழந்தைகளின் கதைகள் அவ்வளவு கொடுமையாக உள்ளன.

இந்தியாவை கொலை செய்து விட்டீர்கள். மணிப்பூரில் மகளை இழந்த பெண் அந்த சடலத்துடன் இரவு முழுவதும் இருந்ததை கண்ணீருடன் கூறினார் என்றார் ஆவேசத்துடன். அப்போது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, வடகிழக்கு மாநிலங்களை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசி வருகிறார் என்று விமர்சனம் செய்தார். தொடர்ந்து எதிர்ப்புகளுக்கு மத்தியில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சில் அனல் தெறித்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in