அதிர்ச்சி... மத்திய ராணுவப்படைக்கு மணிப்பூர் அரசு கண்டனம்!

மணிப்பூர் முதல்வர்
மணிப்பூர் முதல்வர்

மணிப்பூரில் மத்திய ராணுவப்படை அத்துமீறி செயல்படுவதாக கூறி மணிப்பூர் அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது. இந்த வன்முறையில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், மணிப்பூரில் கடந்த 8-ம் தேதி பாலல் என்ற பகுதியில் மத்திய அரசின் துணை ராணுவப்படையினருக்கும், கலவரக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ராணுவத்தினரின் தாக்குதலில் 3 கலவரக்காரர்கள் உயிரிழந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் மணிப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து நேற்று கூடிய மணிப்பூர் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் பாலல் சம்பவத்துக்காக மத்திய துணை ராணுவப்படையினருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், துணை ராணுவப்படையினரும் இந்த செயலை மத்திய அரசிடம் புகாராக அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், ஆயுதப்படைக்கான அதிகாரத்தை விரிவு படுத்தவும், பதற்றமான பகுதியில் வீரர்களுக்கான சிறப்பு அதிகாரத்தை மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மாநில பாஜக அரசு ஒன்று, மத்திய அரசின் படைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in