மணிப்பூர் விவகாரத்தில் தலையிடாதீர்கள்... மிசோரமின் புதிய முதல்வருக்கு பிரேன்சிங் அட்வைஸ்!

லால்துஹோமா, பிரேன்சிங் (வலது)
லால்துஹோமா, பிரேன்சிங் (வலது)

மணிப்பூர் மாநில உள் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங், மிசோரம் புதிய முதல்வர் லால்துஹோமாவுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

மிசோரம் மாநிலத்தி்ல் புதிதாக முதல்வர் பொறுப்பேற்றுள்ள சோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்துஹோமா, சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "மணிப்பூரில் உள்ள பழங்குடியின மக்கள் சரியாக நடத்தப்படவில்லை" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், லால்துஹோமாவின் கருத்துக்கு பதிலளித்த மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், "மணிப்பூரில் என்ன நடந்தாலும் அது எங்கள் மாநிலத்தின் உள் விவகாரம். அண்டை மாநில சகோதரர்கள் ஏராளமானோர் எங்களை தொடர்பு கொண்டு, மணிப்பூரில் அமைதி திரும்ப தங்களிடம் தீர்வு உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். மோரேவில் (மணிப்பூர் மாநில பகுதி) மிசோரம் மக்களை காவல் துறையினர் தொந்தரவு செய்யக் கூடாது என மிசோரம் புதிய முதல்வர் கூறிய கருத்தை துரதிர்ஷ்டவசமாக காண நேர்ந்தது.

இது அரசியலமைப்பு சட்டத்துக்கு அப்பாற்பட்டது. ஏனெனில், இது மணிப்பூரின் உள்விவகாரம். மோரேவில் என்ன நடக்கிறது என்பது லால்துஹோமாவுக்கு தெரியாது.

கிகி, நாகா, மெய்ட்டி, மெய்டி பங்கல் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் மோரேவில் வசிக்கின்றனர். லால்துஹோமாவுக்கு எனது தீவிரமான கோரிக்கை என்னவென்றால், அமைதி திரும்ப உதவுங்கள் என்பதே. மிசோரத்தில் நிலவிய புரூ அகதிகள் பிரச்சினை குறித்து நான் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே, மணிப்பூரில் இயல்புநிலை திரும்ப பிரார்த்தனை செய்வதோடு எங்களுக்கு உதவுங்கள்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in