53 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றிய நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த அதிமுக தலைவர்!

53 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றிய நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த அதிமுக தலைவர்!

திமுகவிடமிருந்து 53 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றப்பட்ட மணப்பாறை நகர்மன்ற தலைவர் பதவியை அதிமுக கவுன்சிலர் சுதா ராஜினாமா செய்துள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்கு நடந்து முடிந்த நகர்மன்ற தலைவர் தேர்தலில் 11 வார்டுகளில் வெற்றி பெற்ற அதிமுக, 15 வாக்குகளைப் பெற்று நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றியது. இதில், 18-வது வார்டு அதிமுக உறுப்பினரான பா.சுதா நகர்மன்ற தலைவரானார்.
இதனால் அதிர்ச்சியடைந்த திமுகவினர் துணைத்தலைவர், குழு உறுப்பினர்கள் தேர்தல்களைப் புறக்கணித்தனர். இதனால் எந்த தேர்தலும் நடைபெறவில்லை. அத்துடன் நகர்மன்ற கூட்டமும் நடைபெறவில்லை. இதே நிலை கடந்த 3 மாதங்களாக நீடித்து வந்தது. இதனால் தனது நகர்மன்ற தலைவர் பதவியை சுதா இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை நகராட்சி ஆணையர் சி.என்.சியாமளாவிடம் அளித்தார். அதைப் பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர், சுதாவின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார். 53 ஆண்டுகளாக திமுகவின் கோட்டையாக இருந்த மணப்பாறையை இத்தனை ஆண்டுகள் கழித்து கைப்பற்றிய அதிமுக நகர்மன்ற தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in