தேயிலை தொழிலாளர்களுடன் நடனம்... தேநீர் பரிமாறி வாக்கு சேகரித்தார் மம்தா பானர்ஜி!

டீ தயாரிப்பில் மம்தா
டீ தயாரிப்பில் மம்தா

மேற்கு வங்கம் மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு டீ தயாரித்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.

தேயிலை தொழிலாளர்களிடம் வாக்குசேகரித்தார் மம்தா
தேயிலை தொழிலாளர்களிடம் வாக்குசேகரித்தார் மம்தா

மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் வரும் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. அம்மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரிகள் என மும்முனை போட்டி நிலவுகிறது.

முன்னதாக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த மம்தா பானர்ஜி, இறுதி நேரத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறினார். தற்போது திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி எனும் பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து, திரிணமூல் காங்கிரஸை வாக்களித்து வெற்றிப் பெற வைக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும், அப்பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து, சாலையோர கடையில் தேயிலை தொழிலாளர்களுக்காக டீ தயாரித்து, அவர்களுக்கு பரிமாறினார். மேலும், மேளம் வாசித்தும் மம்தா நடனமாடியதுடன், பள்ளிக்குழந்தைகளுடனும் கலந்துரையாடினார். இதுதொடர்பான படங்களை அக்கட்சி தனது எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in