26,000 ஆசிரியர்கள் பணி நீக்க விவகாரம்; பாஜகவை குடையும் மம்தா பானர்ஜி!

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் 26 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அம்மாநிலத்தில் எதிர்க்கட்சியான பாஜகவை முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், மேற்கு மேதினிபூர் மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, “மாநிலத்தில் 26 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட தீர்ப்பு குறித்து நான் கருத்து தெரிவிக்கவோ, நீதிபதிகளைப் பற்றி எதுவும் சொல்லவோ விரும்பவில்லை.

ஆனால் 26,000 பேரின் வேலைகளை பறித்த பிறகு, 12 சதவீத வட்டியுடன் சம்பளத்தைத் திருப்பித் தருமாறு நீங்கள் அவர்களிடம் கேட்கிறீர்கள். இதை சரிசெய்ய அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். மேற்கு வங்க மக்கள் இந்த கட்சிகளை மன்னிக்க மாட்டார்கள். பிரச்சினைகளை சரிசெய்ய மாநில அரசின் முயற்சிகளை நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்து முடக்கினர். மீண்டும் 10 லட்சம் பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான மாநில அரசின் முடிவை தடுக்க எதிர்க்கட்சியான பாஜக சதி செய்தது.

அவர்கள் (பாஜக) வேலையில்லாத இளைஞர்களின் முகங்களில் இருந்து கண்ணீரைத் துடைக்க விரும்பவில்லை, ஆனால் தேர்தலில் வெற்றி பெற அவர்களை பயன்படுத்த விரும்புகிறார்கள்.

26,000 ஆசிரியர்கள் நீக்கப்பட்டால் அரசு நடத்தும் பள்ளிகளில் யார் கற்பிப்பார்கள்? ஆர்எஸ்எஸ் அப்பணியை செய்யுமா? மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணி இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்களிப்பது பிரதமர் மோடியின் கைகளை வலுப்படுத்தும்.

திரிணமூல் காங்கிரஸ், பாஜக
திரிணமூல் காங்கிரஸ், பாஜக

இங்கு வகுப்புவாத மற்றும் ஜனநாயக விரோத பாஜகவை எதிர்த்து போராடுவது திரிணமூல் காங்கிரஸ் தான். சுட்டெரிக்கும் வெயிலைப் பற்றி கவலைப்படாமல் இங்கு 7 கட்டங்களில் தேர்தலை நடத்துகிறது தேர்தல் ஆணையம். 40 தொகுதிகள் உள்ள தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் போது, 42 தொகுதிகள் உள்ள மேற்கு வங்கத்தில் ஏன் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த இயலாது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in