காங்கிரஸ் அல்லாத புதிய அணி: மம்தா பானர்ஜி - அகிலேஷ் யாதவ் முக்கிய முடிவு

மம்தா பானர்ஜி - அகிலேஷ் யாதவ்
மம்தா பானர்ஜி - அகிலேஷ் யாதவ்காங்கிரஸ் அல்லாத புதிய அணி: மம்தா பானர்ஜி - அகிலேஷ் யாதவ் முக்கிய முடிவு

காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டையும் கைக்கெட்டும் தூரத்தில் வைத்திருக்க திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பிஜூ ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் காங்கிரஸ் அல்லாத புதிய அணியை கட்டமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

கொல்கத்தாவில் இன்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சந்தித்துப் பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஜு ஜனதா தளத்தின் தலைவரான ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கையும் அடுத்த வாரம் சந்திக்கிறார். இவர்கள் மூவரும் காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணியை உருவாக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ராகுல் காந்தியை எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவராக சித்தரிக்கும் பாஜகவின் முயற்சியை முறியடிக்கும் நோக்கில் இந்த உத்தி அமைந்துள்ளது. சமீபத்தில் லண்டனில் இந்தியா குறித்துப் பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தீவிரமாக கோரிக்கை வைத்து வருகிறது.

இது தொடர்பாகப் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி சுதிப் பந்தோபாத்யாய், "ராகுல் காந்தி வெளிநாட்டில் கருத்து தெரிவித்தார், அவர் மன்னிப்பு கேட்கும் வரை பாஜக நாடாளுமன்றத்தை செயல்படவிடாது. இதன் பொருள், ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளின் முகமாக இருக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. காங்கிரசை எதிர்க்கட்சிகளின் "பெரிய முதலாளி" என்று நினைப்பது தவறானது” என்று கூறினார்.

அகிலேஷ் யாதவும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளிடமிருந்தும் சமமான தூரத்தை பராமரிக்க விரும்புவதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் "நாங்கள் மம்தா திதியுடன் இருக்கிறோம். தற்போது, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடமிருந்தும் சமமான தூரத்தை பராமரிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in