'பிரதமர் சிங்கம் போல பேசுகிறார். ஆனால் எலிபோல செயல்படுகிறார்' - கார்கே காட்டம்!

'பிரதமர் சிங்கம் போல பேசுகிறார். ஆனால் எலிபோல செயல்படுகிறார்' - கார்கே காட்டம்!

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். ஆனால் பாஜகவினரின் நாய்களாவது நாட்டுக்காக உயிரை தியாகம் செய்துள்ளதா என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராஜஸ்தானின் அல்வாரில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, அருணாசல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் சமீபத்தில் நடந்த இந்தியா-சீனா மோதல் குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசும்போது, "நாங்கள் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம், நாட்டின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உயிரை தியாகம் செய்தார்கள். எங்கள் கட்சி தலைவர்கள் நாட்டு ஒற்றுமைக்காக தங்கள் உயிரைக் கொடுத்தார்கள். நீங்கள் (பாஜக) என்ன செய்தீர்கள்? உங்கள் நாய்கள் எதுவும் நாட்டுக்காக இறந்ததா? குடும்ப உறுப்பினர்கள் யாராவது தியாகம் செய்திருக்கிறார்களா? இல்லை" என்று கூறினார்.

மேலும், "மோடி அரசாங்கம் தாங்கள் மிகவும் வலிமையானவர்கள் என்று கூறிக்கொண்டு, தங்களைத் தாங்களே தட்டிக்கொடுத்து கொள்கிறார்கள். ஆனால் எல்லையில் தகராறுகளும், மோதல்களும் அதிகரித்து வருகின்றன. கல்வான் எல்லையில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த பிறகு, சீன அதிபரை மோடி 18 முறை சந்தித்தார். இத்தனைக்கு பிறகும் சீனா எல்லையில் ஏன் இப்படி நடக்கிறது?. சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், ஆனால் அரசு விவாதத்திற்கு தயாராக இல்லை. இந்தியா-சீனா எல்லையில் சீனாவின் ஊடுருவலை மத்திய அரசு தடுக்க முடியாததால், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தத் தயங்குகிறது. பிரதமர் வெளியில் சிங்கம் போல பேசுகிறார், ஆனால் உண்மையில், அவர் உள்ளே எலி போல் செயல்படுகிறார். நாங்கள் நாட்டுடன் இருக்கிறோம், ஆனால் அரசாங்கம் மக்களிடம் தகவல்களை மறைக்கிறது" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in