காங்கிரஸ் தலைவர் போட்டியில் இணைகிறார் மல்லிகார்ஜுன கார்கே - அடுத்தடுத்து அரங்கேறும் பரபரப்பு!

காங்கிரஸ் தலைவர் போட்டியில் இணைகிறார் மல்லிகார்ஜுன கார்கே - அடுத்தடுத்து அரங்கேறும் பரபரப்பு!

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங் மற்றும் சசி தரூருடன் மூன்றாவது வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருந்த அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வர் சர்ச்சை காரணமாக போட்டியிலிருந்து விலகினார். இந்த சூழலில் கட்சியின் உயர்மட்டத்தின் ஆதரவுடன் கூடிய அதிகாரப்பூர்வ வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே போட்டியிடுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். நேற்று சோனியா காந்தியுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு இவர் இந்த தேர்தலில் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 17ம் தேதி நடைபெறவுள்ள காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்காக திக்விஜய் சிங் மற்றும் சசி தரூர் ஆகியோர் இன்று தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளனர்.

வேட்புமனுத்தாக்கலுக்கு இறுதி நாளான இன்று மல்லிகார்ஜுன கார்கேவும் தனது மனுவை தாக்கல் செய்யவுள்ளார். இப்போதுவரை காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூன்று பேர் களத்தில் உள்ளனர். வேட்புமனுக்களை திரும்பப்பெறும் நாளான அக்டோபர் 4ம் தேதிதான் எத்தனை பேர் களத்தில் உள்ளனர் என்பது தெரியவரும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in