மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்திற்காக எவ்வளவு ரூபாய் செலவு?: கேள்வி எழுப்பும் ஈபிஎஸ்

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்திற்காக எவ்வளவு ரூபாய் செலவு?: கேள்வி எழுப்பும் ஈபிஎஸ்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தவறான தகவல்களை அளிக்கிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுத் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " விளம்பர மோகத்தில் இருக்கும் தமிழக அரசு நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்துள்ளது. அதில் ஒரு திட்டம் மக்களைத் தேடி மருத்துவம். திட்டம் தொடங்கும் போதே செய்ய முடியாத பல வாக்குறுதிகள் கொடுத்தனர். இந்த திட்டத்தின் மூலம் முறையாக மருந்துகள் வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்," ஒரு கோடி பயனாளர்களுக்கு மேல் மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார். ஆனால் மாநில மருத்துவத்துறை அதிகாரிகளிடம் அதற்கான விவரம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக எவ்வளவு ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்ற விவரத்தையும், பயனாளர்கள் விவரத்தை அரசும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் வெளியிட வேண்டும்" என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in