கெயில் விவகாரத்தில் விரைவில் முடிவெடுங்க!

முதல்வருக்கு வைகோ வேண்டுகோள்
கெயில் விவகாரத்தில் விரைவில் முடிவெடுங்க!

"கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் விவாகரத்தில் விரைவில் முடிவு ஏற்பட தமிழக முதல்வர் ஸ்டாலின் வழி வகுத்திட வேண்டும்" என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், " கெயில் நிறுவனம், வேளாண் விளைநிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதற்கு, தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களின் விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் நெடுஞ்சாலை ஓரமாகப் பதிக்கின்ற வகையில், மாற்று வழிகளில் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் எனக்கோரி வருகின்றனர். முந்தைய அதிமுக அரசு இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தது. தற்போதைய திமுக அரசும் அதே நிலைப்பாட்டைத்தான் மேற்கொண்டு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

மேலும், " இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், காரியபள்ளி கிராமத்தில், கெயில் நிறுவனம் குழாய் பதிக்க முனைந்துள்ளது. அதை எதிர்த்து அந்தப் பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 65 சென்ட் நிலம் வைத்து இருக்கின்ற ஏழை விவசாயி கணேசன், தனது நிலம் முழுமையாகப் பறிபோவதைத் தாங்க முடியாமல் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, விவசாயிகள் நலனைப் பாதுகாப்பதில் தொடர்ந்து அக்கறையுடன், விவசாயிகளுடன் இணைந்து நின்று செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு, இந்தப் பிரச்சினையில் விரைவில் ஒரு முடிவு ஏற்பட வழி வகுத்திட வேண்டும். அத்துடன், விவசாயி கணேசன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும்" என்று வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in