உறுதிமொழியை மீறி விட்டார் கோத்தபய ராஜபக்ச: முன்னாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு

உறுதிமொழியை மீறி விட்டார் கோத்தபய ராஜபக்ச: முன்னாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு

தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை என அறிவிப்பு செய்து ஆட்சிக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்ச உறுதிமொழியை மீறி விட்டார் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை என அறிவிப்பு விடுத்து ஆட்சிக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்ச தற்போது அந்த உறுதிமொழியை மீறிவிட்டார். தனது ஆட்சியின்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் நாங்கள் ஆட்சிப்பீடமேறினால் தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை எனவும் அறிவிப்பு விடுத்தார். ஆனால், இன்று நாட்டில் என்ன நடக்கிறது?

தற்போதைய அரசு சர்வகட்சி அரசு கிடையாது. அதன் மூலம் சர்வதேச ஆதரவைப் பெறவும் முடியாது" என மைத்திரிபால சிறிசேனா கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in