மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ச நாளை முக்கிய அறிவிப்பு!

மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்ச நாளை முக்கிய அறிவிப்பு!

இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை தவிர்த்து வருகிறது. பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது அமைச்சரவை கலைக்கப்பட்டது. இதில் பலர் மீண்டும் அமைச்சராக விரும்பவில்லை. இதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட அமைச்சரவையில் பசில் ராஜபக்சவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இதனிடையே, இலங்கையில் திடீரென வெடித்த வன்முறையில் எம்பி ஒருவர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மக்கள் நடத்தி வந்த அமைதிப் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியதற்கு மகிந்தவின் ஆதரவாளர்கள்தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. மேலும், அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக் கோரி மக்களின் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து இலங்கையில் போராட்டம் வெடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில், இலங்கை நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜபக்ச குடும்பத்தினர் அரசுப் பதவியில் இருக்கக் கூடாது என்று மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த முடிவை அவர் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in