மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஷிண்டே முகாமில் இணைந்தார்: உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவு

தீபக் சாவந்த்
தீபக் சாவந்த்மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஷிண்டே முகாமில் இணைந்தார்: உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவு

உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவாக, மகாராஷ்டிர முன்னாள் சுகாதார அமைச்சர் தீபக் சாவந்த் இன்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தார்.

மகாராஷ்ட்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அடுத்த பெரும் பின்னடைவாக, மகாராஷ்டிர முன்னாள் சுகாதார அமைச்சர் தீபக் சாவந்த் இன்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இன்று அவர் முன்னிலையில் இணைந்தார்.

தீபக் சாவந்த் அப்போதைய ஒருங்கிணைந்த சிவசேனாவின் எம்எல்சியாக இருந்தார். தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசாங்கத்தில் 2014 முதல் 2018 வரை பொது சுகாதாரத்துறையின் கேபினட் அமைச்சராக இருந்தார். 2018ல் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட அவருக்கு, 2019 சட்டமன்றத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டது. ஆனாலும் ஷிண்டே - தாக்கரே உரசல் தொடங்கியது முதலே, சாவந்த் உத்தவ் தாக்கரேவின் ஆதரவாளராக இருந்து வந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in