விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது புதிய விஷயம் அல்ல: மகாராஷ்டிர விவசாய அமைச்சர்

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது புதிய விஷயம் அல்ல: மகாராஷ்டிர விவசாய அமைச்சர்

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது புதிய விஷயம் அல்ல, பல ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன என்று மகாராஷ்டிரா விவசாய அமைச்சர் அப்துல் சத்தார் தெரிவித்துள்ளார்

மகாராஷ்டிராவில் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள தனது தொகுதியான சில்லோடில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விவசாய அமைச்சர் அப்துல் சத்தார், "விவசாயி தற்கொலை விவகாரம் புதிதல்ல. இது போன்ற சம்பவங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. எனது தொகுதி உட்பட மகாராஷ்டிராவில் விவசாயிகள் தற்கொலைகள் எங்கும் நடக்கக்கூடாது" என்று கூறினார்.

மார்ச் 3 முதல் 12 வரை சில்லோடில் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த காலகட்டத்தில் மராத்வாடா பகுதியில் உள்ள ஔரங்காபாத் மாவட்டத்தில் ஆறு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

கடந்த வாரம் பருவமழை காரணமாக சில்லோடில் பயிர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை அமைச்சர் சத்தார் நேற்று ஆய்வு செய்தார். விவசாயிகள் தற்கொலை குறித்த அறிக்கையை வேளாண் ஆணையர் தலைமையிலான குழு சமர்ப்பித்தவுடன், குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் செயல்படுத்தும் என்று அமைச்சர் சத்தார் கூறினார். மேலும், "மாநில அரசு விவசாயிகளுக்காக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு பயிர்க் காப்பீட்டை வழங்குகிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in