மராத்தா சமூகத்துக்கு விரைவில் இடஒதுக்கீடு: முதல்வர் அளித்த உறுதி

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

மராத்தா இடஒதுக்கீடு வழங்க அனைத்துக் கட்சி தலைவர்களும் ஆதரவு அளித்துள்ளதாகவும், ஆனால் இடஒதுக்கீடு மற்ற சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும் எனவும் மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதுகுறித்து ஆலோசிக்க மும்பையில் இன்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

மும்பையில் அனைத்துக் கட்சி கூட்டம்
மும்பையில் அனைத்துக் கட்சி கூட்டம்

பின்னர் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், ‘‘மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆதரவு அளித்துள்ளனர். இடஒதுக்கீடு வழங்குவதில் மாநில அரசு உறுதியாக உள்ளது.

மராத்தா இடஒதுக்கீடு கோரி மகாராஷ்டிராவில் தொடரும் போராட்டம்
மராத்தா இடஒதுக்கீடு கோரி மகாராஷ்டிராவில் தொடரும் போராட்டம்

இடஒதுக்கீடு சட்டத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும், மற்ற சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும். மராத்தா சமூகத்துக்கு நீதி வழங்குவதற்கு ஏற்ப விரைவில் முடிவுகள் எடுக்கப்படும். மராத்தா சமூக மக்கள் அமைதி காக்க வேண்டும். அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

முற்றுகிறது மோதல்... பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி அறிவிப்பு!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!

தீபாவளிக்கு தெறிக்கப் போகுது... மதுப் பிரியர்கள் உற்சாகம்; நவ.10 முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!

திடீர் பரபரப்பு.. ரத்த சிவப்பாய் மாறிய கடல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in