அரசு விழாவுக்கு பாஜக பிரமுகரை அழைத்த மதுரை போக்குவரத்துக் கழக மேலாளர் சஸ்பெண்ட்!

பணியிடை நீக்கம்
பணியிடை நீக்கம்

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு பாஜக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் கலந்து கொண்டு மூக்குக் கண்ணாடி வழங்கிய விவகாரம் மதுரை அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மதுரை அரசு விரைவு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அபிமன்யு
அபிமன்யு

மதுரை அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனையில் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கான இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கண் பார்வை குறைபாடு கண்டறியப்பட்டவர்களுக்கு இலவச கண்ணாடி வழங்கும் விழா பணிமனை அலுவலகத்தில் மே 24-ம் தேதி நடைபெற்றது. மதுரை அரசு விரைவு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் அபிமன்யு தலைமையில் மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் பங்கேற்று இலவச மூக்குக் கண்ணாடியை வழங்கினார்.

அரசுக்குச் சொந்தமான அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் நடத்திய நிகழ்விற்கு மக்கள் பிரதிநிதி இல்லாத பாஜக மாவட்டத் தலைவரை அழைத்ததற்கு அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கிளை மேலாளர் அபிமன்யு மீது நடவடிக்கை எடுக்கத் தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்தன. இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘அரசுப் பணிமனை விழாவில் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்ள அனுமதித்த கிளை மேலாளர் ஏ.அபிமன்யு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in