`காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் முதன்மை மாவட்டம் மதுரை'- முதல்வரை வலியுறுத்தும் சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

"மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணைக் கட்டுவதை தடுக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பூவுலகின் நண்பர்கள் மற்றும் அமெரிக்கன் கல்லூரி இணைந்து நடத்திய "இளையோரும் காலநிலையும்" என்ற கருத்தரங்கம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பங்கேற்றார். 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சு. வெங்கடேசன், "சமீபத்தில் வெளியான காலநிலை மாற்றம் குறித்து ஒரு அறிக்கையின் படி காலநிலை மாற்றத்தால் பாதிப்படைய உள்ள முதன்மையான மாவட்டமாக மதுரை மாவட்டம் விளங்குகிறது. இதன் காரணமாக குறைந்த அளவிலான மழையும், காற்றும் நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சருக்கு விரிவான கடிதம் ஒன்று எழுதி அனுப்பி இருந்தேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தின் நலன் சார்ந்து கோரிக்கையை முன் வைக்கிறார். அதில், கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவதை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். "கல்மேல் கால் கல்லல் ஆகாது" என்ற 11-ம் நூற்றாண்டின் கல்வெட்டின் பிரதியை பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் அளிக்க வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in