1,000-ம் ஆண்டு சாதனையை முறியடிப்பதென்றால் சும்மாவா...? மோடியைக் கிண்டல் செய்த மதுரை எம்.பி!

மதுரை எம்.பி விமர்சனம்
மதுரை எம்.பி விமர்சனம்1,000-ம் ஆண்டு சாதனையை முறியடிப்பதென்றால் சும்மாவா...? மோடியைக் கிண்டல் செய்த மதுரை எம்.பி!

தமிழுக்கும், தமிழகத்திற்கும் மோடி என்ன செய்தார் என்று பாஜக வெளியிட்டுள்ள புத்தகத்தை மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கிண்டல் செய்துள்ளார்.

'தமிழுக்கும், தமிழகத்திற்கும் மோடி என்ன செய்தார்' என்று புத்தகம் ஒன்றை பாஜக வெளியிட்டுள்ளது. இதனை கிண்டல் செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், கிண்டல் செய்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மோடி என்ன செய்தார்? ராமேஸ்வரத்திற்கு! அங்குதான் அவர் உலக சாதனையை செய்துகொண்டிருக்கிறார். ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு இடையே வெறும் 17 கிலோ மீட்டர் ரயில் தண்டவாளத்தை 4 ஆண்டுகளாக அமைத்துக் கொண்டிருக்கிறார்.

ரூ.208 கோடி திட்டத்தை ரூ.521 கோடியில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். 2021-ம் ஆண்டு மதுரை எய்ம்ஸில் சேர்ந்த மாணவர்கள் 2026-ல் படிப்பு முடிக்கும் வரை கல்லூரி கட்டிடத்தை கண்ணில் பார்க்கக்கூடாது என்பதற்காக ராமநாதபுரத்தில் படிக்கவைத்துக் கொண்டிருக்கிறார். இரண்டும் அவரே தொடங்கிவைத்த திட்டங்கள். 1,000-ம் ஆண்டு சாதனையை முறியடிப்பதென்றால் சும்மாவா?" என்று பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in