`என்னிடம் கேட்காமல் அதிகாரிகள் விசாரணை செய்யக்கூடாது': மனுதாரரை மிரட்டிய மதுரை துணை மேயரால் சலசலப்பு!

மேயரிடம் மனு அளித்த மனுதாரர்
மேயரிடம் மனு அளித்த மனுதாரர்

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மேயரிடம் புகார் அளிக்க வந்தவரை மிரட்டிய துணை மேயரால் சலசலப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம் மேற்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் நாகராஜன், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மண்டல தலைவர் சுவிதா விமல், கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில், 97-வது வார்டு மனை முறையறை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த முத்துவேல், மேயர் இந்திராணி முன்பு, துணை மேயர் நாகராஜன் மனை முறையறையை நிறுத்தி வைத்துள்ளார் என்றார். இதுகுறித்து, பல்வேறு முறை நேரில் சந்தித்து கேட்டபோதும் மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்க துணை மேயர் நாகராஜன் தடையாக உள்ளார் என்றும் புகாரளித்தார்.

அப்போது, "அதிகாரிகள் முன்னிலையில் மனு கொடுத்த முத்துவேல் மீது வழக்கு தொடருவேன் என்றும், என்னிடம் கேட்காமல் அதிகாரிகள் விசாரணை செய்யக்கூடாது" என மிரட்டும் தொனியில் துணை மேயர் நாகராஜன் பேசியதால் கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in