அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பணி புதிய விதிகள் 2020-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. 18 வயதிலிருந்து 35 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விதிகளை எதிர்த்து அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக அரசு விதிகள் செல்லும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரி தலைமை நீதிபதி அமர்வு இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in