அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2001-2006 திமுக ஆட்சியின் போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு வசதி துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக 2006-ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து 6.50 கோடி ரூபாய் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்திருந்தார்கள். மேலும் கடந்த பிப்ரவரி மாதம் அந்த சொத்துகளை முடக்கி வைத்திருந்தனர். இந்த சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியும் அனிதா ராதாகிருஷ்ணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த முறை சொத்துக்குவிப்பு வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத்துறையினர் விசாரிக்க நீதிபதிகள் தடை விதித்தனர். மேலும் வழக்கு குறித்து விளக்கமளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், அந்த வழக்கு இரண்டு வாரத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால் அதுவரை உயர் நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கைத் தள்ளி வைக்க வேண்டும் எனவும் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அனிதா ராதாகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், செப்டம்பர் 9-ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தனர். அதுவரை அமலாக்கப்பிரிவு விசாரிக்க விதித்த தடையை நீட்டிக்க முடியாது என்றும் அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி வழக்கை விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in