பகீர்... உதயநிதி தலை உடலில் இருந்து பிரிந்திருக்கும்... பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

வேறு எந்த மதத்தைப் பற்றியும் பேசியிருந்தால் இந்நேரம் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலை உடலில் இருந்து பிரிந்திருக்கும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சருமான நரோத்தம் மிஸ்ரா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா
அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா

மத்தியப்பிரதேச மாநிலம் பிண்டில் ஜன் ஆசிர்வாத் யாத்திரை நடைபெற்றது. இதில் மாநில உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தவைருமான நரோத்தம் மிஸ்ரா கலந்து கொண்டார்.

அப்போது தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்து பேசியதுகுறித்து நரோத்தம் மிஸ்ராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், "சனாதன தர்மத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. சனாதன தர்மத்தில் ரத்தம் சிந்துவது நல்லதல்ல. வேறு எந்த மதத்தைப்பற்றியும் பேசியிருந்தால் இந்நேரம் உதயநிதி தலை உடலில் இருந்து பிரிந்திருக்கும்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "மத்தியப்பிரதேசத்தில் இந்த முறை பாஜக வேட்பாளர்கள் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவார்கள். மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும். பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது" என்றார். உதய நிதி தலை உடலில் இருந்து பிரிந்திருக்கும் என்று பாஜக அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in