இந்தி மொழியில் மருத்துவப் படிப்பு: மத்திய பிரதேசத்தில் முதன்முறையாக அறிமுகம்

இந்தி மொழியில் மருத்துவப் படிப்பு: மத்திய பிரதேசத்தில் முதன்முறையாக அறிமுகம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 13 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய மூன்று இளநிலை மருத்துவப்படிப்புக்கான பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்படவுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அக்டோபர் 16 ம் தேதி இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு புத்தகங்களை வெளியிடுவதன் மூலம் மத்திய பிரதேசத்தில் இந்தியில் மருத்துவக் கல்வியைத் தொடங்கிவைக்கிறார்.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை இந்தியில் கற்பிக்க முடியாது என்ற எண்ணத்தை இது மாற்றும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார். அவர், “இந்தி மொழியிலும் கல்வி கற்பதன் மூலம் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற எண்ணத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான ஒரு படி இது. கல்வி மொழி தாய்மொழியில் இருக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தீர்மானம்” என தெரிவித்தார்

புத்தகங்களின் இந்தி மொழிபெயர்ப்பிற்காக, போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு பிப்ரவரியில் 'மந்தர்' என்ற இந்தி பிரிவுகளை முறையாக அமைத்து நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. பணிக்குழுவில் மருத்துவத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். 97 மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் 5,568 மணி நேரத்திற்கும் மேலாக பணியாற்றி இந்த பாடங்களை மொழிப்பெயர்ந்துள்ளனர்.

மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் கூறுகையில், “ மாணவர்களுக்கு ஆங்கில புத்தகங்களுடன் இந்தி புத்தகங்களும் கிடைக்கும், ஆனால் தொழில்நுட்ப வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருக்கும். நாட்டிலேயே இந்தியில் மருத்துவக் கல்வியைத் தொடங்கும் முதல் மாநிலமாக மத்தியப் பிரதேசம் இருக்கும். இந்தியில் எம்பிபிஎஸ் படிப்புக்கான முன்னோடித் திட்டம் காந்தி மருத்துவக் கல்லூரியில் இருந்து தொடங்கும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in