வெறும் கைகளால் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்த பாஜக எம்.பி!

வெறும் கைகளால் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்த பாஜக எம்.பி!

மத்திய பிரதேசத்தில் உள்ள கத்காரி பெண்கள் பள்ளியில் சுகாதாரமற்ற முறையில் இருந்த கழிவறையை பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா வெறும் கைகளால் சுத்தம் செய்த வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்தன் மிஸ்ரா வெளியிட்டுள்ள ட்வீட்டில், தற்போது பாஜக யுவ மோர்ச்சாவால் நடத்தப்படும் சேவைத் திட்டத்தின் கீழ், கத்காரி பெண்கள் பள்ளியின் கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்த நிகழ்வு நடைபெற்றது என தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி முதல் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி வரை பாஜகவின் இளைஞர் அணி தூய்மை இயக்கத்தை நடத்தி வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மரம் நடும் இயக்கத்தில் பங்கேற்க ஜனார்தன் மிஸ்ரா கத்காரி பள்ளிக்குச் சென்றார்.

அப்போது இந்த பெண்கள் பள்ளியில் கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் இருப்பதைக் கண்டு, அதை தனது வெறும் கைகளால் ஜனார்தன் மிஸ்ரா சுத்தம் செய்தார்.

தொடர்ந்து பேசிய மிஸ்ரா, “சுகாதாரம் மற்றும் தூய்மையைப் பராமரிப்பது ஒவ்வொருவரின் கடமை. இது மகாத்மா காந்தி மற்றும் பிரதமர் மோடியால் வழங்கப்பட்ட செய்தி. இதுபோன்ற தூய்மை இயக்கத்தில் நான் பங்கேற்பது இது முதல் முறையல்ல” என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in