ஆம் ஆத்மிக்கு தாவிய டெல்லி கவுன்சிலர்கள் ஒரே இரவில் மீண்டும் காங்கிரஸில் ஐக்கியம்: நடந்தது என்ன?

ஆம் ஆத்மிக்கு தாவிய டெல்லி கவுன்சிலர்கள் ஒரே இரவில் மீண்டும் காங்கிரஸில் ஐக்கியம்: நடந்தது என்ன?

ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த சில மணி நேரங்களிலேயே, டெல்லி காங்கிரஸ் துணைத் தலைவர் அலி மெஹ்தி மற்றும் 2 கவுன்சிலர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக தெரிவித்துள்ளனர்.

டெல்லி மாநகராட்சியில் முஸ்தபாபாத்தில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர் சபிலா பேகம் மற்றும் பிரிஜ்புரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாஜியா கட்டூன் ஆகியோர் அலி மெஹ்தி தலைமையில் நேற்று ஆம் ஆத்மியில் இணைந்தது பரபரபரப்பை உருவாக்கியது. ஆனால் அவர்கள் ஒரே இரவில் மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளதாகக் கூறி அடுத்த பரபரப்பை கிளப்பியுள்ளனர்.

இன்று அதிகாலையில், அலி மெஹ்தி தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட ஒரு வீடியோவில் தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டார். அதில் மெஹ்தி கைகூப்பி மன்னிப்பு கேட்டபடி, "நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன். எனது தந்தை 40 ஆண்டுகளாக காங்கிரஸில் இருக்கிறார். மற்ற கவுன்சிலர்களையும் இதே போன்ற வீடியோக்களை பதிவேற்றுமாறு கேட்டுக் கொண்டேன். பிரிஜ்புரியைச் சேர்ந்த கவுன்சிலர் நாஜியா கட்டூன், முஸ்தபாபாத்தைச் சேர்ந்த கவுன்சிலர் சபிலா பேகம் மற்றும் 300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த எங்கள் தொகுதித் தலைவர் அலீம் அன்சாரி, ராகுல் ஜி மற்றும் பிரியங்கா ஜியின் தொண்டர்களாக இருந்தவர்கள், இருப்பார்கள், ராகுல் காந்தி ஜிந்தாபாத்" என்று தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மிக்கு தாவியதற்காக காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்ததால், இவர்கள் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பியுள்ளனர்.

டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 104 இடங்களையும் வென்றது. காங்கிரஸ் கட்சியால் இந்த தேர்தலில் ஒன்பது வார்டுகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in