வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதல்வர்! என்ன காரணம்?

வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதல்வர்! என்ன காரணம்?

மிசோரம் மாநில முதல்வர் வாக்களிக்க முடியாமல் திரும்பியதால் பரபரப்பு நிலவியது. வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால் அவர் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

மிசோரம் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்களின் இயக்கம், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 170 பேர் போட்டியிடுகின்றனர்.

தேர்தலையொட்டி, வாக்காளர்கள் காலையிலேயே வாக்கு சாவடிகளுக்கு வந்து வரிசையில் நின்றனர். வாக்களிக்க வந்த ஆளும் மிசோ தேசிய முன்னணி தலைவர் மற்றும் முதல்வருமான ஜொராம்தங்கா செய்தியாளர்களிடம் கூறும்போது, இது தொங்கு சட்டசபையாக இருக்காது. மிசோ தேசிய முன்னணியின் அரசாக அமையும். அதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

எனினும், மிசோரம் தேர்தலில் வாக்களிக்க சென்ற ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவரான ஜொராம்தங்கா, அவருடைய வாக்கை பதிவு செய்ய முடியவில்லை. இதுபற்றி அவர் கூறும்போது, வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யவில்லை. வாக்களிப்பதற்காக சென்றேன். ஆனால், இயந்திரம் வேலை செய்ய முடியாத நிலையில், எனது தொகுதிக்கு சென்று காலை கூட்டம் நிறைவடைந்த பின்பு வாக்களிப்பேன் என அவர்களிடம் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார். மாநில முதல்வர் வாக்களிக்க முடியாத சூழலால், சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in