அதிமுக ‘தலைவர்’ ரவீந்திரநாத்? ஓபிஎஸ் மகனுக்கு எதிராக ஈபிஎஸ் முகாம் கொந்தளிப்பு!

ரவீந்திரநாத் எம்பி
ரவீந்திரநாத் எம்பி

மக்களவை உறுப்பினர்களுக்கான அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பில், ’அதிமுக தலைவர்’ என்று ரவீந்திரநாத் விளிக்கப்பட்டுள்ளார். ஓபிஎஸ் மகனுக்கான இந்த விநோத அங்கீகாரத்துக்கு ஈபிஎஸ் முகாம் புகைச்சல் கண்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குவதை முன்னிட்டு, அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்காத் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். அவர்களில் அதிமுகவின் மக்களவை பிரதிநிதியான ரவீந்திரநாத்தும் அடங்குவார்.

அழைப்பு
அழைப்பு

அமைச்சர் அனுப்பிய அழைப்பில், ’மக்களவை அஇஅதிமுக தலைவர்’ என்று இடம்பெற்றிருப்பதை ஓபிஎஸ் தரப்பினர் வெகுவாய் சிலாகித்து பரப்பி வருகின்றனர். அதிமுக பிளவுற்ற நிலையில், ரவீந்திரநாத்தின் அதிமுக எம்பி அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு மக்களவைத் தலைவருக்கு ஈபிஎஸ் சார்பில் அனுப்பப்பட்ட கடிதம் பரிசீலனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த பரிசீலனையின் முடிவு வெளியாகும்வரை, அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினராகவும், அந்த வகையில் கட்சியின் மக்களவை தலைவராகவும் ரவீந்திரநாத் தொடர்கிறார். கட்சி சார்பிலான அனைத்து அதிகாரபூர்வ கூட்டங்களிலும் அவரே பங்கேற்கிறார். இந்த வரிசையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கான அழைப்பு ரவீந்திரநாத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது அதிமுகவின் ஈபிஎஸ் முகாமில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in