மக்களவைத் தேர்தல்... மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

’’மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்ல வேண்டும், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். தோல்வியடையும் தொகுதிகளின் மாவட்டச் செயலாளர்கள் நிச்சயம் மாற்றப்படுவார்கள்’’ என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவலாயத்தில் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட அளவில் 234 தொகுதிகளுக்கு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், காணொளி காட்சி மூலமாக நடைபெற்றது. இன்று காலை 10:30 மணிக்கு இந்த கூட்டமானது துவங்கியது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக இந்த கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இறுதியாக பேசிய ஸ்டாலின், ’’மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாம் கவனமாக பணியாற்ற வேண்டிய நேரம் இது. அதனால் மக்களவைத் தேர்தலில் நாம் மற்றும் நம்முடைய கூட்டணிக் கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும்.

அதற்காக நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும். தோல்வியைத் தழுவும் தொகுதிகளின் மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்படுவீர்கள் என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!


Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in