சூடுபிடிக்கும் மக்களவைத் தேர்தல்... தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை!

இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை
இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு உள்ளிட்ட மாநில தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்டவைகளை சரி பார்க்கும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளை அறிவுறுத்தியது.

தமிழகத்தைப் பொறுத்தவரை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. அதிகாரிகள் மற்றும் வாக்குப்பதிவு மையங்களில் பங்கேற்கும் அலுவலர்களுக்கு பயிற்சிகள் தொடங்கவுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரம்
வாக்குப்பதிவு இயந்திரம்

இந்த நிலையில் மண்டலம் வாரியாக தேர்தல் அதிகாரிகளுடன் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இக்கூட்டம் நடைபெறும்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான மின்னணு இயந்திரங்கள், உபகரணங்கள், வாக்குச்சாவடி, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், மாநில சட்டம் ஒழுங்கு நிலை, வாக்குச்சாவடிகள் தொடர்பானவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in