நெருங்கும் மக்களவை தேர்தல்... தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று முக்கிய ஆலோசனை!

சத்ய பிரதா சாகு
சத்ய பிரதா சாகு

மக்களவைத் தேர்தல் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது

சென்னையில் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்துகிறார். மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கட்சிகளின் சார்பாகவும் நாடாளுமன்ற தேர்தலுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தொடர்பான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, அக்டோபர் 27ல் தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல், மக்களவைத் தேர்தல் ஏற்பாடு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

ஏற்கெனவே 5 மாநில தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டில் இருந்து 40 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in