மு.க.ஸ்டாலினின் அதிரடி வியூகம்... மக்களவை தேர்தலுக்காக திமுக வார் ரூம் அமைப்பு!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளளது.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், தேர்தலை எதிர்கொள்ளும் பணியில் அனைத்துக் கட்சிகளும் இறங்கியுள்ளன. இதற்காக தேர்தல் கூட்டணி, தொகுதி தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என அனைத்துக் கட்சிகளும் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன. அத்துடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் திமுக மூன்று குழுக்களை அமைத்துள்ளது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி, பரப்புரை மேற்பார்வை ஆகியவற்றை திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை மேற்கொள்வார்.

ஊடக விவாதக் குழு, நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை போன்ற பணிகளை மேற்கொள்ள திமுக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் தலைமையிலான குழு செயல்படும். சட்டக்குழு மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையிலான குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வார் ரூம் அமைக்கப்படும் என்றும் திமுக. தலைமை அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in