எங்க ஓனரே நாடாளுமன்றம் போறாரு நாங்க போகக்கூடாதா... டி.ஆர்.பாலுவை கலாய்த்த மது குடிப்போர் சங்கம்!

தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் ஆறுமுகம்
தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் ஆறுமுகம்

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் கழுத்தில் தாலி அணிந்தபடி வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது சமூக விழிப்புணர்வு இயக்கங்களும் மற்றும் சுயேச்சைகள் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கழுத்தில் தாலி அணிந்தபடி வேட்பு மனு தாக்கலுக்கு வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் அவர்.

ஆறுமுகம் வேட்பு மனு தாக்கல் செய்த போது...
ஆறுமுகம் வேட்பு மனு தாக்கல் செய்த போது...

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆறுமுகம், ”தூத்துக்குடி தொகுதி எம்பி-யான கனிமொழி, ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என தெரிவித்தார். ஆனால் எதுவும் நடக்கல. இன்றைக்கு தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகரித்துள்ளனர். இவர்களைக் காப்பாற்ற தாலி கயிறு அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளேன்.

இரண்டு திராவிட கட்சிகளும் எந்த காலத்திலும் மதுவை ஒழிக்க மாட்டார்கள். இளம் விதவைகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். மது குடித்து இறந்தவர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும். மதுவினால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் படிப்பை அரசே ஏற்க வேண்டும். கடல் நீரில் மதுபானத்தை தயாரிக்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் பார்களிலும் சின்டெக்ஸ டேங்க் அமைக்க வேண்டும். பாட்டிலில் குடிநீரை விற்பனை செய்யக்கூடாது” என்று சொன்னார்.

வேட்பு மனு தாக்கலின் போது உறுதுமொழி எடுத்துக்கொண்ட ஆறுமுகம்
வேட்பு மனு தாக்கலின் போது உறுதுமொழி எடுத்துக்கொண்ட ஆறுமுகம்

தொடர்ந்து அச்சங்கத்தின் மாநில தலைவர் செல்லபாண்டியன் கூறும் போது, ”தமிழகத்தில் பக்தி பிரியர்கள் தனி, பகுத்தறிவு பிரியர்கள் தனி. நாங்கள் பாட்டில் பிரியர்கள். பாட்டில் பிரியர்கள் குவாட்டரையும் கோழி பிரியாணியும் வாங்கிவிட்டு, எந்த கொடியை பிடிப்பது என தெரியாமல் உள்ளனர். அதனால் நாங்களே களமிறங்கிவிட்டோம். மதுபாட்டில் மூடியை திறப்பவர்கள் எல்லோரும் எங்கள் உறுப்பினரே. மதுபான பார்களே அரசியல் பயிற்சிப் பட்டறை.

ஏற்கெனவே எங்களது முதலாளி (டி.ஆர்.பாலு) தேர்தலில் நிற்கிறார். தற்போது மீண்டும் அவரே நிற்கிறார். பார் நடத்துபவர்களும் நாடாளுமன்றம் செல்கின்றனர். மதுபான ஆலை நடத்துபவர்கள் மக்களவை செல்கின்றனர். அதனால் பாதிக்கப்பட்ட நாங்களும் நாடாளுமன்றம் செல்ல தேர்தலில் நிற்கிறோம்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in