சுதந்திர தினத்தன்று பூரண மதுவிலக்கு அறிவிப்பு: தமிழக அரசை வலியுறுத்தும் அன்புமணி ராமதாஸ்!

சுதந்திர தினத்தன்று பூரண மதுவிலக்கு அறிவிப்பு: தமிழக அரசை வலியுறுத்தும் அன்புமணி ராமதாஸ்!

சுதந்திர தினத்தன்று பூரண மதுவிலக்கு தொடர்பான குறைந்தபட்ச செயல் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்வது குறித்து வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைத்தது. வல்லுநர் குழுவிடம் அறிக்கையைப் பெற்ற தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்குத் தடை விதிக்க பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்டோரிடம் தமிழ்நாடு அரசு கருத்துக் கேட்டு வருகிறது.

அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டியைச் சந்தித்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை முழுமையாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடிதம் கொடுத்தார்.

அதன் பிறகு அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நடிகர் சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆகியோர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு ஆதரவான விளம்பரங்களில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும். தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தீவிரமாக முனைப்புக் காட்டி ஆன்லைன் சூதாட்டங்களை முற்றிலுமாக தடை செய்து ஆயிரக்கணக்கான குடும்பங்களின் நிம்மதியை உறுதி செய்ய வேண்டும். சுதந்திர தினத்தன்று தமிழக அரசு பூரண மதுவிலக்கு தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும். குறைந்தபட்சம் படிப்படியாகக் குறைப்பதற்கான செயல் திட்டத்தை வெளியிட வேண்டும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in