நேருவைப் போல் நானும் எம்.பியாக சம்பளம், பங்களா வாங்க மறுத்துவிட்டேன்: வருண் காந்தி

நேருவைப் போல் நானும் எம்.பியாக சம்பளம், பங்களா வாங்க மறுத்துவிட்டேன்: வருண் காந்தி

இளம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நான், சம்பளம், பங்களா மற்றும் அரசு வாகனத்தை வாங்க மறுத்துவிட்டேன் என்று பாஜக எம்.பி வருண் காந்தி தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி வருண் காந்தி முன்னாள் பிரதமரும், தனது தாத்தாவுமான ஜவஹர்லால் நேருவை பாராட்டி பேசியுள்ளார். ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய பிலிபிட் எம்.பி வருண் காந்தி, ஜவஹர்லால் நேருவைப் போலவே, ஒரு இளம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம், பங்களா மற்றும் பிற ஊதியங்களை மறுத்து, சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு உதவ விரும்புவதாகக் கூறினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தப் போது, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, பொதுச் செலவில் சம்பளம், பங்களா, கார் எதுவும் வாங்கவில்லை என்றும் கூறியதாகவும் தெரிவித்தார்.

வருண்காந்தி, சமீப காலமாக வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகளில் தனது சொந்தக் கட்சியான பாஜகவை விமர்சித்து வருகிறார். மேலும், தான் நேருவுக்கும், காங்கிரஸுக்கும் எதிரானவர் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். இது மட்டுமின்றி, இந்திரா காந்தியை நாட்டின் தாய் என்றும் சில மாதங்களுக்கு முன்பு வருண் காந்தி புகழ்ந்தார். 2024 மக்களைத் தேர்தலுக்கு முன்னதாக வருண் காந்தி காங்கிரஸுடன் நெருங்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in