இந்தியாவை காப்பாற்ற ஒன்றிணைவோம்: கேரள மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

மாநிலங்களை ஒருங்கிணைத்து உரிமைக்காக போராடுவோம் என முழக்கம்
இந்தியாவை காப்பாற்ற ஒன்றிணைவோம்: கேரள மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

"மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்படும். இந்தியாவை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அரசியல் மன கசப்புகளை விடுத்து, அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மத்தியக் குழு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் மத்திய- மாநில அரசு உறவுகள் எனும் தலைப்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "வ.உ.சிதம்பரனார் சிறை வைக்கப்பட்ட கண்ணூர் மண்ணில் மாநாடு நடைபெறுகிறது. மாநில உரிமைகளை காப்பதில் சிங்கம் போல் செயல்படுகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். எனக்கு வழிகாட்டும் முதல்வராக பினராயி விஜயன் திகழ்கிறார். ஒரு மாநிலத்தில் ஆட்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பினராயி விஜயன் இருக்கிறார். ஒரு கையில் போராட்ட குணம், ஒரு கையில் தொலைநோக்கு திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார் பினராயி விஜயன். தமிழ்நாடு முதல்வரான நானும், கேரள முதல்வரும் தலையாட்டி பொம்மையாக இருந்தால் பிரச்னை இருந்திருக்காது. பெரும்பான்மையோடு வென்ற அரசு இருக்கும்போது ஆளுநரை வைத்து ஆட்சியை நடத்த முயற்சிக்கப்படுகிறது.

எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரை வைத்து மசோதாக்களை கிடப்பில் போடுகின்றனர். மாநிலங்களின் உரிமைக்காக போராட முதலில் தென் மாநிலங்களின் முதல்வர்கள் குழு அமைக்கப்பட வேண்டும். மாநிலங்களின் உரிமைக்காக போராட முதலில் தென் மாநிலங்களின் முதல்வர்கள் குழு அமைக்கப்பட வேண்டும். மாநிலங்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து உரிமைகளுக்காக போராட வேண்டியது அவசியம். இந்தியாவை காப்பாற்ற வேண்டுமெனில் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்படும். இந்தியாவை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அரசியல் மன கசப்புகளை விடுத்து, அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இதுவரை தாமதம் செய்து கொண்டிருக்கிறார் தமிழக ஆளுநர். 2 முறை நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் இன்றுவரை குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை. எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலம் ஆட்சியை நடத்த முயற்சிப்பதுதான் சட்டத்தின் ஆட்சியா?. பெரும்பான்மையோடு வென்ற அரசு இருக்கும்போது ஆளுநரை வைத்து ஆட்சியை நடத்த முயற்சி செய்கிறார்கள். எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரை வைத்து மசோதாக்களை கிடப்பில் போடுகின்றனர்.

வேற்றுமைகள் அனைத்தையும் அழித்து ஒற்றைத்தன்மையை உருவாக்க நினைக்கிறார்கள். பிரட்டிஷ்காரர்கள்கூட இவ்வளவு அதிகாரம் கொண்ட ஒற்றைத்தன்மையை உருவாக்க முயற்சிக்கவில்லை. ஆங்கில ஆட்சி கூட செய்யாததை தற்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே மதம், ஒரே கட்சி என மாற்ற பாஜக முயல்கிறது. மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்து மக்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு மட்டும் ரூ.21 ஆயிரம் கோடி நிதி வர வேண்டியுள்ளது. திட்டக்குழு, தேசிய வளர்ச்சிக்குழு இருந்தால்தான் நிதி கேட்பீர்கள் என்று அதையும் கலைத்தார்கள். எந்த சட்டத்தையும் விவாதம் இல்லாமல் பாஜக அரசு நிறைவேற்றிக் கொள்கிறது. சிலர் அரசியல் அரிச்சுவடியை மாற்றுகிறார்கள். இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும்" என்று தனது உரையை முடிக்கும்போது சிவப்பு வணக்கம் தோழர்களே என்றார் முதல்வர்.

Related Stories

No stories found.