மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்க மட்டோம்; தமிழக விவசாயிகள் பக்கமே நிற்போம்: செல்வபெருந்தகை உறுதி!

செல்வபெருந்தகை
செல்வபெருந்தகை மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்க மட்டோம்; தமிழக விவசாயிகள் பக்கமே நிற்போம்: செல்வபெருந்தகை உறுதி!

கர்நாடக அரசு நீதிமன்ற அனுமதி இல்லாமல் மேகேதாட்டு அணையை கட்டமுடியாது. அவர்கள் அணையை கட்டுவோம் என்றால், தமிழக காங்கிரஸ் சார்பில் டெல்டா விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். ஒருபோதும் இதனை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்

இது குறித்துப் பேசிய செல்வபெருந்தகை, “தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்துக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாடுபடுகிறது. மேகதாது விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கர்நாடக அரசு நீதிமன்ற அனுமதி இல்லாமல் மேகேதாட்டு அணையை கட்டமுடியாது. தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்க முடியாது. அவர்கள் அணையை கட்டுவோம் என்றால், தமிழக காங்கிரஸ் டெல்டா விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

அவர்களின் மாநிலம் அவர்களின் நலன் சார்ந்தது. எங்கள் மாநிலம் எங்களின் நலன் சார்ந்தது. அவர்கள் எந்த உரிமைக்காக போராடுகிறார்களோ, அந்த உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம். தமிழகத்தின் நலனில் சமரசம் செய்துகொள்ளமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட அம்மாநில காங்கிரஸ் அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், மத்திய அமைச்சரை சந்தித்தார். இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in