சாத்தியப்படுத்துவோம்: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க களமிறங்கினார் நிதிஷ்குமார்!

ராகுல் காந்தியுடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்திப்பு
ராகுல் காந்தியுடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்திப்பு சாத்தியப்படுத்துவோம்: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க களமிறங்கினார் நிதிஷ்குமார்!

2024-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் களமிறங்கியுள்ளார். டெல்லியி் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை அவர் சந்தித்தார்.

ராகுல் காந்தியுடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்திப்பு
ராகுல் காந்தியுடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் களமிறங்கியுள்ளார். அதன்படி, டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துப்பேசினார். அப்போது, பீகார் துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா தள தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங், ஆர்ஜேடி ராஜ்யசபா எம்.பி. மனோஜ் குமார் ஜா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, வரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளோம் என்றும் அதற்கான வரலாற்று சிறப்புமிக்க முதல் அடி இது என்றும் இது தேசத்திற்கான எதிர்க்கட்சிகளின் பார்வையை கட்டமைக்கும் என்றும் கூறினார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், "டெல்லிக்கு வந்ததே எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிதான் என்றும் எவ்வளவு கட்சிகளை ஒருங்கிணைத்து வேலை செய்ய முடியுமோ அதனை சாத்தியப்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

இதே நேரத்தில், பாரத் ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அந்த அணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற விரும்பவில்லை என்பதை வெளிப்படையாகவே பலமுறை கூறிவிட்டார். திரிணமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை தனியாகவே சந்திக்கும் என்று கூறிய நிலையில், ராகுல் காந்தி தகுதியிழப்பு சம்பவத்திற்குப் பின்னர் அந்தக் கட்சி தனது நிலைப்பாட்டை சற்று தளர்த்தியிருந்தாலும் அது ஆதரவாக மாறுமா என்பதைப் பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

இதனிடையே, ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்று அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in