கூட்டணியிலிருந்து செல்பவர்கள் செல்லட்டும்; நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேச்சு!

அண்ணாமலை
அண்ணாமலை

"கூட்டணியிலிருந்து செல்பவர்கள் செல்லட்டும்" என்று பாஜக நிர்வாகிகள் மத்தியில் மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக பேசியுள்ளார்.

சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமலேயே முதலில் கூட்டம் நடைபெற்றது. அதிமுக உடனான கூட்டணி முறிந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், "தனித்து போட்டியிடுவது பாஜகவுக்கு புதிதல்ல. தமிழகத்தில் இதற்கு முன் பாஜக பலமுறை தனித்து போட்டியிட்டுள்ளது. நாம் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். மாவட்ட தலைவர்களை டெல்லி தலைமை கண்காணித்து கொண்டிருக்கிறது" என்றார்.

இதன் பின்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், "கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும். அது அவர்களது விருப்பம். பாஜக தேசிய தலைமையிடம் எனது கருத்தை நான் ஆழமாக கூறிவிட்டேன். டெல்லியில் உள்ள பாஜக மேலிடத் தலைவர்கள் தான் என கூட்டணி பற்றி முடிவெடுப்பார்கள். ஜனவரியில் என் மண் என் மக்கள் நடைபெற உள்ள நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட உள்ளன" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in