சிபிஐ எனது வீட்டிற்கு வந்து காலணிகளை எண்ணட்டும்... மஹுவா மொய்த்ரா அதிரடி!

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

மக்களவையிலிருந்து என்னை வெளியேற்ற சதி நடக்கிறது. சிபிஐ எனது வீட்டிற்கு வந்து எனது காலணிகளை எண்ணட்டும் என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார். நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த புகார் மீது, மக்களவை நெறிமுறைக்குழு வரும் 26-ம் தேதி விசாரணை நடத்த உள்ளது.

ஹிரானந்தானி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி, நெறிமுறைக் குழுவிடம் அளித்த வாக்குமூலத்தில், மஹுவா மொய்த்ரா எம்.பி. அவரது நாடாளுமன்ற லாக்இன் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டை தன்னிடம் கொடுத்ததாகவும், அதில் தனக்கு தேவைப்படும்போது அவர் சார்பாக நேரடியாக கேள்விகளை பதிவிட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா

தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியின் இந்த வாக்குமூலம் வெளியான நிலையில், இது குறித்து பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, “ மக்களவையிலிருந்து என்னை வெளியேற்ற சதி நடக்கிறது. நான் துர்கா பூஜையில் பிஸியாக இருப்பதால், சிபிஐ எனது வீட்டிற்கு வந்து எனது காலணிகளை எண்ணட்டும்” என தெரிவித்துள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in