களமிறங்கினார் மம்தா பானர்ஜி: சூடுபிடிக்கப் போகிறது குடியரசுத் தலைவர் தேர்தல்!

களமிறங்கினார் மம்தா பானர்ஜி: சூடுபிடிக்கப் போகிறது குடியரசுத் தலைவர் தேர்தல்!

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக சோனியா காந்தி, அர்விந்த் கேஜ்ரிவால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட இந்தியாவில் உள்ள 22 எதிர்கட்சிகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறவுள்ளது. பாஜக சார்பில் குடியரசு தலைவருக்கான வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதியாகியுள்ள நிலையில், காங்கிரஸ் அல்லது எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த சூழலில் தற்போது மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மகாராஷ்ட்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே , திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 22 எதிர்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். எதிர்கட்சியின் தலைவர்கள் வரும் 15-ம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்துடைய அனைத்து எதிர்கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்றும், மத்திய அரசின் பல்வேறு அமைப்புகள் மூலம் எதிர்கட்சிகளின் தலைவர்கள் குறிவைக்கப்பட்டுகிறார்கள் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஏற்கெனவே முயற்சி செய்துவரும் நிலையில், மம்தா பானர்ஜியும் இந்த முன்னெடுப்பை தொடங்கியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in