‘லியோ’ பட விழாவின் புரோமோ வீடியோ; வரும் தேர்தலில் திமுகவுக்கு செக்!

லியோ விஜய்
லியோ விஜய்

'லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக உருவான புரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜயின் ’லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாத இறுதியில் நடக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், அதிகப்படியான டிக்கெட் கோரிக்கை மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும் இதற்கு பின்னால் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை எனவும் தயாரிப்பு நிறுவனம் சொல்லியது.

ஆனாலும், வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு தரவில்லை என்பதற்காகவும், விஜயின் அரசியல் செயல்பாடுகளைத் தடுப்பதற்காகவே இதனை திமுக அரசு செய்திருப்பதாகவும் இணையத்தில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தேதி அறிவித்து உருவாகியுள்ள புரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படி தான் நடிகர் விஜய்காந்துக்கு நெருக்கடி கொடுத்து, தனிக்கட்சி ஆரம்பிக்கும் அளவுக்கு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆரம்பம் முதலே விஜய்காந்த் மீது தனி மரியாதையும், அன்பும் வைத்து, அவர் வழியில் தான் எங்கள் தளபதியும் உருவாகி வந்தார்... ‘ஜெயிலர்’ விழாவில் கலாநிதி மாறன் பேசியது, இப்போது ‘லியோ’ விழா ரத்து என இதெல்லாமே தேர்தலில் எதிரொலிக்கும் என்கிற ரீதியில் விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இந்த வீடியோ படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டதா அல்லது ரசிகர்களின் எடிட்டா என்பது குறித்தானத் தகவல் இல்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in