ஒழுங்காக பேப்பர் படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்: அண்ணாமலைக்கு ஆலோசனை சொன்ன பொன்முடி!

பொன்முடி
பொன்முடிஒழுங்காக பேப்பர் படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்: அண்ணாமலைக்கு ஆலோசனை சொன்ன பொன்முடி!

அரசுக்குத் தகவல் தெரியாமல் தமிழக ஆளுநர் துணை வேந்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் பொன்முடி திமுக எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் தலைமையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ‘’அரசியலில் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்குவதாக வெளியான அறிவிப்பு திமுக சட்டமன்ற உறுப்பினரும், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினருமான பரந்தாமனுக்குத் தெரியாமல இது நடந்திருக்க கூடும் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், அந்த அறிவிப்பு வெளியான போது அவர் சிண்டிகேட் உறுப்பினராகவே இல்லை அவருக்கு எப்படி தெரியும்?

தமிழ் மொழி வளர்ச்சி மீது அண்ணாமலைக்கு அக்கறை இருந்தால் ஏன் ஆளுநரை சந்தித்து இணை வேந்தருக்கு அறிவிப்பு வழங்கவில்லை என கேட்க வேண்டும். பாஜக அறிக்கை விட்டதால் தான் அண்ணா பல்கைகழகத்தில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படாது என அறிவிப்பு வெளிவந்ததாக கூறுவது ஏற்க முடியாது. தெளிவாக தெரிந்து கொண்டு அண்ணாமலை பேச வேண்டும். எந்த மொழியையும் படிக்க நாங்கள் எதிர்ப்பாக இல்லை. ஆனால், இரு மொழிக்கொள்கை தான் நாங்கள் ஆதரிக்கிறோம்.

கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என கூறியது திராவிட மாடல் ஆட்சி தான். ஆனால் இங்கு இந்தியைப் புகுத்த முற்படுகிறார்கள். தமிழ் மொழிக்கு எதிராக அண்ணாமலை பேசுகிறார். சிபிஎஸ்இ பாடப்பிரிவில் ஆங்கிலம் கட்டாயம் தமிழ் மொழி விருப்ப பாடம் என வைத்துள்ளார்கள். அதில் தமிழ் மொழி கட்டாயம் என மத்திய அரசு கொண்டு வரவில்லை. அதனை அவர்கள் செய்ய வேண்டும். அண்ணாமலை அரைகுறையாக பேசுவதை நிறுத்திவிட்டு, வரலாற்றைத் தெரிந்து, பேப்பரை நன்றாக படிக்க வேண்டும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in