ஈபிஎஸ் மீது பாய்ச்சல்… ஓபிஎஸ்சுக்கு திடீர் பாராட்டு: காய் நகர்த்துகிறாரா டி.டி.வி.தினகரன் !

ஈபிஎஸ் மீது பாய்ச்சல்… ஓபிஎஸ்சுக்கு திடீர் பாராட்டு:  காய் நகர்த்துகிறாரா டி.டி.வி.தினகரன் !

அதிமுக பொதுக்குழுவிற்கு சென்று உண்மையை உடைத்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஆகியோரின் துணிச்சல் பாராட்டுக்குரியது என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

சேலத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,” பணத்திற்கும் பதவிக்கும் அடிமையானவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கிறார்கள். அதிமுக ஃபெயிலியர் ஆகிவிட்டது, அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை எடப்பாடி பழனிசாமி விலைக்கு வாங்கி விட்டார்.
அதிமுக பொதுக்குழுவிற்கு சென்று உண்மையை உடைத்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஆகியோரின் துணிச்சல் பாராட்டுக்குரியது” என்றார். திடீரென ஈபிஎஸ்க்கு எதிராகவும், ஓபிஎஸ்சுக்கு ஆதரவாகவும் டி.டி.வி.தினகரன் கருத்துத் தெரிவித்துள்ளது அவரது கட்சியினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in