அந்தமானில் குவியும் இந்து இயக்கத் தலைவர்கள்: காரணம் என்ன?

அந்தமானில் குவியும் இந்து இயக்கத் தலைவர்கள்: காரணம் என்ன?

இந்து இயக்கத்தின் தமிழகத் தலைவர்கள் பலரும் அந்தமானில் முகாமிட்டுள்ளார். சாவர்க்கர் இரட்டை ஆயுள் தண்டனையைக் கழித்த அந்தமான் சிறையில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்விற்காகச் சென்றிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சாவர்கரின் 139-வது பிறந்தநாள் விழா இம்மாதம் 28-ம் தேதி அந்தமானில் நடக்கிறது. சாவர்க்கர் அந்தமான் செல்லுலார் சிறையில் இருந்தார். அங்குதான் இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்தார். அந்த சிறைக்கே போய் மரியாதை செய்யும் நிகழ்ச்சியை இந்து மக்கள் கட்சி முன்னெடுக்கிறது.

இந்நிகழ்வோடு சேர்த்து அந்தமான் தமிழ்சங்கத்திலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. வரும் 28-ம் தேதி, திருவள்ளுவர் அரங்கத்தில் வைத்து `சும்மா வரவில்லை சுதந்திரம்' என்னும் கருத்தரங்கமும் நடக்கிறது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்க இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், சிவசேனா நிர்வாகி சச்சிதானந்தம், இந்து மகா சபா மாநிலத் தலைவர் தா.பாலசுப்பிரமணியம், பார்வர்ட் பிளாக் அமைப்பின் தென் இந்தியத் தலைவர் திருமாறன் உள்பட பலரும் முகாமிட்டுள்ளனர்.

அந்தமானில் சாவர்க்கரின் நிகழ்வை முடித்துவிட்டு தமிழகத்திலும் வீதி, வீதியாக சாவர்கருக்கு நிகழ்வுகளை முன்னெடுக்க இந்து இயக்கங்கள் திட்டமிட்டுள்ளன. திமுக அரசு, அந்நிகழ்வுக்கு முட்டுக்கட்டைப் போட்டால், அந்தமானில் முடிந்தது. தமிழகத்தில் முடியவில்லை என்னும் கோஷத்தோடு இந்துத்துவ அரசியலை முன்னெடுக்கவும் இந்த பயணத்தை தொடங்கியிருப்பதாக இந்து இயக்கத்தினர் மத்தியில் பேசப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in