வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திமுகவில் இருந்து திடீர் நீக்கம்: என்ன காரணம்?

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

திமுகவில் இருந்து மூத்த வழக்கறிஞரும், திமுக செய்தித் தொடர்பாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திமுக செய்தித் தொடர்பாளராக இருந்து வந்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதன் பின்னணி இப்போது தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் அண்மையில் நடந்தது. இதில் மல்லிகார்ஜூன கார்கேயும், சசிதரூரும் மோதினர். இதில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மல்லிகார்ஜூன கார்கே வாகை சூடினார். இந்நிலையில் இந்தத் தேர்தல் முடிவுகுறித்தும், மல்லிகார்ஜூன கார்கே தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் தன் ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தோற்றத்தில் கார்கே படமும் இடம்பெற்றிருந்தது. இணையவாசிகள் இதுதான் திமுகவின் நிலைப்பாடா? எனவும் இதற்கு பின்னூட்டங்கள் இட்டனர். இந்நிலையில், அந்தப் பதிவு சர்ச்சையாவதைப் பார்த்து கே.எஸ்.ராதாகிருஷ்ணனே அதை நீக்கிவிட்டார். இருந்தும் ஏற்கெனவே கட்சி குறித்து ஒளிவுமறைவின்றி விமர்சனங்களை முன்வைக்கும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மீது தலைமை அதிருப்தியில் இருந்ததால் இந்த தற்காலிக நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி்யுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in